மாவட்ட செய்திகள்
சரக்கு வாகனம் மோதி 2 பேர் பலி! ஒருவர் படுகாயம்!! மதுரையில் சோகம்!!!

சரக்கு லாரி ஒன்று சாலையின் வளைவில் திரும்பியபோது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 3 பேர் அடுத்தடுத்து மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சம்பந்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு ஜீவாநகர் சந்திப்பில் சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையின் இடது பக்கம் திரும்பிய அந்த வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது கண் இமைக்கும் நேரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. 75 வயது முதியவர் உட்பட 3 பேர் மீது லாரி கொடூரமாக மோதியது.

இதை பார்த்த பொது மக்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டிய கார்த்திக் என்ற ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த விபத்து குறித்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி பார்ப்பவரை பதைபதைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
