மாவட்ட செய்திகள்
காட்பாடியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கோலாகலம்!

வேலூர்,ஏப்.14: காட்பாடியில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 131வது பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் ,காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெகு விமரிசையாக அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் அப்பு (எ) எஸ்.வெங்கடேசன் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாநகராட்சி 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.அன்பு, அதிமுக வேலூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ஆ.அமர்நாத் ஆகியோர் கலந்துகொண்டு அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை ,எளிய தாய்மார்கள் 200 பேருக்கு புடவைகள் வழங்கினர். அதன்பின்னர் 100 ஏழை, எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் சுமார் 400 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பங்க் பி.முனுசாமி , ஏ.ஆர்.ஆண்டனி டியோதர், சதீஷ்குமார், கே.பி.ராஜ்குமார், A.ஆமோஸ், ஏஜாஸ்,ஸ்டீபன், மெர்வின், குள்ளா (எ) ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
