BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் அலங்காரம் துவங்கியது.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் அலங்காரம் துவங்கியது.

உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை.

உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5ஆம் தேதி நோன்புசாட்டுதலுடன் துவங்கியது 12ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கம்பத்துக்கு தினசரி பெண்கள் மஞ்சள் நீரூற்றி வழிபட்டு வருகின்றனர். 16ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கிராம சாந்தி பூஜை வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. 15ஆம் தேதி கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது இதைத்தொடர்ந்து பூவோடு ஆரம்ப நிகழ்ச்சி நடந்தது வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
19ஆம் தேதி பூவோடு நிறைவு 20ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு மாலை 4 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 21 தேதி மாலை 4 மணிக்கு துவங்குகிறது.
இதையொட்டி தேர் அலங்காரம் செய்வதற்காக சிறப்பு பூஜை நடத்தி பந்தக்கால் நடப்பட்டது தேரை சுத்தப்படுத்தி அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன வர்ணம் பூசுதல் வண்ண காகிதங்கள் பணி நடந்து வருகிறது.
22 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் பரி வேட்டையும் அன்று இரவு 10 மணிக்கு குட்டை திடலில் பிரம்மாண்டமான வாணவேடிக்கையும் நடைபெறுகிறது 23ஆம் தேதி கொடி இறக்கம் மஞ்சள் நீராட்டுடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற இருப்பதால் தேரோட்டம் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 21ஆம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் 10 11 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மாதிரி திருப்புதல் தேர்வு செய்முறை தேர்வுகள் நடைபெற்று வரும் வேளையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கலாம் என என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )