BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே அங்கன்வாடி மையத்தில் உணவருந்திய 5 குழந்தைகள் திடீர் மயக்கம் இதனால் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பரமனந்தல் திருவள்ளுவர் நகர் பகுதியில் 1 வயது முதல் மூன்று வயதுக்குட்பட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் மதிய உணவு அருந்திய கருணாநிதி மகள் வர்ஷா, முனியப்பன் மகள் ஜீவாஶ்ரீ, காந்தி மகன் நித்திஷ்,இளையராஜா மகன் ரித்திஷ் ,அமுல்ராஜ் மகன் அஸ்வந்த் ஆகிய ஐந்து பிள்ளைகளுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பரமனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.


இதனால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் மதிய உணவில் பல்லி இருந்ததால் குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )