BREAKING NEWS

சினிமா

`தளபதி 66’ படத்தில் வெள்ளிவிழா நாயகனா?

Thalapathy Vijay Fans (@VijayFansPage) / Twitter

விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ படத்தில், வெள்ளி விழா நாயகன் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படம், கடந்த 13-ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள இந்தப் படத்தை அடுத்து விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார். இவர் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் உருவான, ’தோழா’ படத்தை இயக்கியவர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இதில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசை அமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் நிறைவடைந்துவிட்டதாக சமீபத்தில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி அறிவித்திருந்தார்.

மோகன்

இந்நிலையில் இந்தப் படத்தில், பிரபல முன்னாள் ஹீரோவும் வெள்ளிவிழா நாயகனுமான மைக் மோகன், விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, அவர் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். நடிகர் மைக் மோகன் இப்போது, ‘ஹரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )