BREAKING NEWS

சினிமா

`தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ ஸ்டாலின்’- முதல்வரை சந்தித்த சீனு ராமசாமி நெகிழ்ச்சி.

`தமிழகத்தை ஆளும் 'ஆண் தாய்' ஸ்டாலின்'- முதல்வரை சந்தித்த சீனு ராமசாமி நெகிழ்ச்சி

“தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன்” என்று இயக்குநர் சீனு ராமசாமி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் ‘ஆண் தாய்’ முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். அப்போது, ‘மாமனிதன்’ ‘இடிமுழக்கம்’ ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும் வழங்கினேன். அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக அவர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகள் நினைவாக, நன்றி கூறும் விதமாக நான் நேசித்து படித்த ஜான் ரீடு எழுதிய ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ நூலினை அவருக்கு தந்தேன்.

அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான ‘உங்களில் ஒருவன்’ நூலில் கையொப்பமிட்டு பரிசாக தந்தார். ‘மக்கள் அன்பன்’ என் கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்து வாழ்த்தினார்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )