BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ருபாய் 6,39,6860, 115 கிராம் தங்கம் பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் உண்டியலில் வழங்கப்படும் காணிக்கைகளை மாதம்தோறும் என்ன படுவது வழக்கம். அதன்படி இன்று காலை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு உதவி ஆணையர்கள் கந்தசாமி, மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் எண்ணும் பணி துவங்கியது.

இதில் திருக்கோயில் பணியாளர்கள் , தன்னார்வ தொண்டர்களால் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணபட்டது.
இதில் ருபாய் 6,39,6860 ரொக்கம், 115 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணம் 59 கிடைக்கப்பெற்றது என இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )