மாவட்ட செய்திகள்
சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!

வேலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று மாலை தொடங்கியது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
வேலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று மாலை தொடங்கியது. எதிர்க்கட்சியை சேர்ந்த அதிமுக மாமன்ற தலைவர் எழிலரசன் தலைமையில் ,மாமன்ற உறுப்பினர்கள் கே. பி ரமேஷ், சரவணன், அருணா விஜயகுமார், அஸ்மிதா ராஜேஸ்வரி, அமலா நீருபா மற்றும் பாஜக மாமன்ற உறுப்பினர் சுமதி மனோகரன்
சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
