BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் செய்முறைத்தேர்வு நேரம் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

11th 12th practical exam time reduction / 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான  செய்முறை தேர்வு நேரம் குறைப்பு – News18 Tamil

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள்( ஏப்ரல் 25) முதல் 28-ம் தேதி வரையும், ஏப்ரல் 28 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டுகளில் உயிரியல், வேதியல், இயற்பியல் உள்ளிட்ட முதன்மை தேர்வுகளுக்கு செய்முறை தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது. ஆனால், இந்த கல்வியாண்டில் செய்முறை தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைத்து அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.

இந்த செய்முறை தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை பங்கேற்பார்கள். 10 மதிப்பெண்கள் அகமதீப்பீடு வழங்கப்படுகின்றன. எனவே, 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வு என்பதால் அதனை 2 மணி நேரமாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5-ம் தேதியும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9-ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-ம் தேதியும் தொடங்குகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )