தலைப்பு செய்திகள்
கல்லூரிகளில் ஷிப்ட் முறை வகுப்புகள் !! அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு!!

பாலின அடிப்படையில் ‘ஷிப்ட்’ முறையில் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தகவல் வெளியிட்டுள்ளார்.நேற்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, பாலின அடிப்படையில் காலை, மாலை என ஷிப்ட் முறையில் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக பரீசீலிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைப்பது குறித்து அமைச்சர் பொன்முடியிடம், அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேள்வியை எழுப்பினார். இதனை தொடர்ந்து உறுப்பினர்கள் சிலரும் துணைக் கேள்விகளை எழுப்பி பேசினார்கள்.இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசும்போது, ‘‘வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் இடங்கள் காலியாக உளளன. ‘
நான் முதல்வன்’ போன்ற திட்டங்கள் மூலமாக இந்த காலியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கொண்டு 10 கல்லூரிகளை தமிழகத்தில் தொடங்குவதற்கு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன என்றார்.
மேலும் தற்போது இயங்கி வரும் கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வகுப்புகளுக்கு வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையை கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது’’ என்று அமைச்சர் பொன் முடி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
