மாவட்ட செய்திகள்
உலகப் புத்தகத் திருவிழாவையொட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நம் பள்ளி, நம் பெருமை என்ற தலைப்பின் கீழ் மாணவர்களின் கல்வி படிப்பை மேம்படுத்தும் வகையில் பிரச்சாரம்.

உலகப் புத்தகத் திருவிழாவையொட்டி திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நம் பள்ளி, நம் பெருமை என்ற தலைப்பின் கீழ் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கல்வி படிப்பை மேம்படுத்தும் வகையில் பிரச்சாரம் வாகனத்தை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி மையத்தின் மூலம் பயிற்சி வழங்கவுள்ள தன்னார்வலர் களுக்கான புத்தகங்களை வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி :

தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் பள்ளி பாதுகாப்பு இயக்கம் சேர்ந்து தமிழகம் முழுவதும் ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு புத்தகங்களை வழங்கி சிறிய நூலகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இன்று திருச்சியில் துவங்கியுள்ள இந்த திட்டம் முன்னோடி திட்டமாக எடுத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரம் மையங்களுக்கு இதனைச் செயல்படுத்த வேண்டும் என்று கே.என் நேரு கேட்டுக் கொண்டுள்ளார் கண்டிப்பாக இதனை அனைத்து இடங்களிலும் செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்கிற கேள்விக்கு :
கண்டிப்பாக மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் கொடுத்து படிப்படியாக அதனை சரி செய்வோம் என்றார்.
செய்முறை தேர்வை 1மணி நேரம் குறைக்க அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, பள்ளிக்கல்வித் துறை மண்டல ஒருங்கிணைப்பாளர் மனோகர், பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன், கல்லூரி முதல்வர் முனைவர். பால்தயாபரன், யுங் இந்தியா, திருச்சி மாவட்ட தலைவர் பிரதீப் செந்தில்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் பயிற்சி வழங்கும் தன்னார்வலர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
