BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை அடுத்து கிளியனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு.

குத்தாலம், ஏப்ரல்- 24;
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், கிளியனூர் கிராம ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம். முருகன் முன்னிலையில் கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.முஹமது ஹாலிது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்து கொண்டார்.

                                                                                                                    இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் கலந்துக் கொண்டு பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி இச்சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது. ஆண்டுக்கு நான்கு முறை கிராமசபை கூட்டம் நடைபெற்று வந்ததை, அதை ஆறு முறையாக மாற்றி நடத்திட நம்முடைய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் – 2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெற்று வரக்கூடிய கிராம சபை கூட்டம், இனி வரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 உலக தண்ணீர் தினம் அன்றும், நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் அன்றும் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

1994 ஆம் ஆண்டு சிறப்பு பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவாக்கப்பட்டது. இன்று நடைபெறுகின்ற கிராம சபையின் முக்கிய நோக்கம் நீடித்த நிலையான வளர்ச்சியை அடைவதற்கு நடத்தப்படுகின்றது. இக்கூட்டத்தின் வாயிலாக ஒன்பது விதமான திட்ட இலக்குகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கிராம சபையின் முக்கிய நோக்கம் ஊராட்சிகளில் என்னென்ன பணிகள் நடக்கின்றன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள நடத்தப்படுகிறது. இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது. இங்கு பொது மக்களின் கோரிக்கைகளான, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி கழிப்பறை, சமுதாயக் கூடம் மிக விரைவில் நிறைவேற்றி தரப்படும். மகளிர் சுய உதவிக்குழுவில் தொழில் தொடங்க முன் வர வேண்டும். மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்பட்டது என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அனைத்து ஊராட்சி மனற் தலைவர்களுக்கும் தேசிய பஞ்சாயத்துராஜ் தின வாழ்த்து மடலினை கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வாசித்தார். இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர்முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வேளாண்மை துறையின் சார்பில் ரூபாய் 6050 மதிப்பீல் மானிய விலையில் விவசாயிகளுக்கு தார் பாய், மினிகிட் உளுந்து, பயிர் மற்றும் பேட்டரி கைத்தெளிப்பான் ஆகியவைகள் வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கிராம பொது மக்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இக்கிராமசபை கூட்டத்தில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், இணை இயக்குநர் (வேளாண்மை) சேகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் கு.மகேந்திரன், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், குத்தாலம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் இரா.முருகப்பா, குத்தாலம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுகந்தவள்ளி, ஊராட்சி மன்றத் துணை தலைவர் வி.எஸ்.எம்.மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கஜேந்திரன், ஆசுமதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )