மாவட்ட செய்திகள்
சீர்காழி தாலுக்கா அகரபெருந்தோட்டம் கிராமத்தில் துரை வைகோ செய்தியாளர் சந்திப்பு.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா அகரபெருந்தோட்டம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது திமுக அரசு பதவியேற்றபோது கொரோனா இரண்டாவது அலை மற்றும் மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்தித்து. தற்போது வெற்றிகரமாக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தல் அறிக்கையில் 70 சதவீத அறிவிப்புகளை தற்போதைய ஆட்சியில் நிறைவேற்றியுள்ளார்கள்.
எஞ்சியுள்ள வாக்குறுதிகளுக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஆட்சியை சிறப்பான ஆட்சி என்று நாங்கள் கருதுகிறோம். தமிழகத்தில் நிலவும் மின்வெட்டிற்கு முக்கிய காரணம் ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து வரும் மின்சாரம் குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலக்கரி இறக்குமதியில் மத்திய அரசில் கொள்கையில் பல்வேறு தடைகள் இருந்ததாலும் தற்போது மின் தடையானது தவிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இதனை மத்திய அரசு முழுமையாக மாற்றவேண்டும் எதிர்க்கட்சிகள் அவதூறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
மின்வெட்டுக்கு முக்கிய காரணம் மத்திய அரசுதான் என்பதை மக்கள் உணர வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் சமூக நீதியும் மத விழாக்களும் அமைதியாகவே நடைபெற்று வருகின்றது. வடமாநிலங்களில் ராம நவமி அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்களில் கலவரங்கள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சூழல் தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் தமிழகத்தில் அனுமதிக்ககூடாது விடக்கூடாது என்பதே எங்கள் கூட்டணியின் முதல் நோக்கம். இலங்கையிலுள்ளவாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அங்கிருந்து தமிழர்கள் அகதிகளாக வந்து கொண்டிருக்கிறார்கள் அவ்வாறு வருபவர்களையும் மத்திய அரசு அகதிகளாக அங்கீகரிக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் அனுப்பிய கடிதத்திற்கு மத்திய அரசு இதுவரை எவ்வித பதிலும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது எனவும் தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை சில ஏமாற்றங்கள் இருந்தது அதுபோல் திமுகவிலும் அதே நிலைதான் தொடர்ந்தது. எனவே இனிவரும் காலங்களில் அது போன்ற நிலை வராது முதலமைச்சர் எங்களை தாயுள்ளத்தோடு கூட்டணி கட்சிகளையும் தமிழ் மக்களையும் பாதுகாத்து கொண்டிருக்கின்றார்.
நல்லிணக்கமும் கொண்டிருக்கின்றார்.
எங்கள் கூட்டணியின் முதல் நோக்கம், வலதுசாரி சிந்தனைகள் மற்றும் மதவாத சக்திகளை எதிர்த்து எங்கள் கூட்டணியின் பலத்தை காட்டுவோம்.
எங்கள் கூட்டணி பலமாக உள்ளது இந்தக் கூட்டணியே இனியும் தொடரும் எனவும் தெரிவித்தார் ஆகவே இனிவரும் காலங்களிலும் தேர்தல்களிலும் நாங்கள் ஒற்றுமையோடு பயணிப்போம் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
