மாவட்ட செய்திகள்
நடைப்பயிற்சி மேற்கொண்ட ஹோட்டல் அதிபர் கடத்தல் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் கடத்தப்பட்ட ஓட்டல் அதிபரை மீட்டனர் கடத்திய ஏழு நபர்கள் கைது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் அன்பு மூன்று நட்சத்திர தங்கும் விடுதி ஒன்று வைத்துள்ளார்.


மேலும் பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது இதையடுத்து கடன் கொடுத்த நபர்கள் அன்புக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர் மேலும் மூன்று நட்சத்திர தங்கும் விடுதியும் தற்போது செயல்படாமல் அப்படியே உள்ளது இந்நிலையில் நேற்று காலை வத்தலகுண்டு புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடைபயிற்சி மேற்கொண்டார் அப்போது திடீரென காரில் வந்த மர்ம கும்பல் அன்புவை கடத்திச் சென்றனர் இச்சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்ததை அடுத்து நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையை துவங்கின இதில் தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி நேற்று இரவு தனிப்படையினர் மதுரையில் வைத்து ஹோட்டல் அதிபரை மீட்டனர் மேலும் கடத்தலில் ஈடுபட்ட வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி .சிவா மதுரையை சேர்ந்த வடிவேல். பாலமுருகன் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த பிரபா .விஜய் திருபுவனம் பகுதியைச் சேர்ந்த மணி ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.





கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும்,மறைத்து வைத்திருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர் மேலும் எதற்காக கடத்தினார்கள் என்பது குறித்து வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
