BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி குட்ஷெட்டில் சாப்பாடு பிரச்சினையில் கூலித்தொழிலாளி அடித்துக் கொலை.

திருச்சி குட்ஷெட்டில் சாப்பாடு பிரச்சினையில் கூலித்தொழிலாளி அடித்துக் கொலை – தப்பி ஓடிய மற்றொரு கூலித் தொழிலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (50) இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டிற்குச் செல்லாமல் திருச்சி குட்ஷெட் பகுதியில் லாரிகளில் லோடு ஏற்றும் வேலையை செய்து விட்டு அங்கேயே தங்கி வந்தார்.


இதேபோல் விஜயன் (55) என்பவரும் குட்செட்டில் வேலை பார்த்து வந்தார்.
இதனிடையே உடன் வேலை செய்யும் ஒருவர் இறந்து விட்டதால் அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்றனர். அங்கு சாப்பிடுவதற்காக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. செல்வம் தனது உணவு பொட்டலத்தை கையோடு எடுத்து வந்து வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். மீண்டும் வந்து பார்த்த போது அந்த இடத்தில் சாப்பாடு இல்லாததால் அது எங்கே என்று கேட்டார்.
அப்போது அங்கிருந்த விஜயன் என்பவர் அவரது உணவை இன்னொருவர் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.


இதன் காரணமாக செல்வத்திற்கும் விஜயனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே கோபமடைந்த விஜயன் அங்கிருந்த கட்டை எடுத்து செல்வதை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானார். தகவலறிந்த பாலக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விஜயனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )