மாவட்ட செய்திகள்
கணக்கம் பாளையம் ஊராட்சி ராயல் லட்சுமி நகரில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி.

உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள ராயல் லட்சுமி நகரில் பி.ஏ.பி கால்வாய் செல்கிறது உடுமலை ஜீவா நகர் பகுதியில் இருந்து கண்ணமநாயக்கனூர் செல்லும் சாலையில் பிஏபி கால்வாய் பகுதியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது இந்த சாலை வழியாக மலையாண்டிபட்டினம் குரல்குட்டை ஆண்டிகவுண்டனூர் பகுதி மக்கள் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்று வருகின்றனர் விவசாயிகளின் விளைநிலங்கள் இருந்து காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றன. பள்ளி மாணவ மாணவிகள் பலர் இருசக்கர வாகனத்தில் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் பிஏபி கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் அமைந்துள்ள பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் மேலும் வாகனங்கள் அந்த பகுதிக்குள் டயர் இறங்கும்போது விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளதாக வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர் இதனால் அந்த பகுதியில் சாலையை சீரமைத்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
