BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே ஸ்ரீ பெரிய காளியம்மன் கோவில் கொடை விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானம் துவங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ பெரிய காளியம்மன் கோவில் கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பின்னர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமர்,ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,மாவட்ட தகவல் தொழில் நுட்ப துணைத் தலைவர் கண்ணன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போர்டு சாமி,முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன்,கிளைச் செயலாளர்கள் மாரிமுத்து,பெருமாள் சாமி,முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன் அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )