BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 3,57,229 பேருக்கு தொற்று || Tamil News  India reports 357229 new COVID19 cases

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் ஏறுமுகம் கண்டு வந்தது. தற்போது, அது மீண்டும் குறையத்தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் இந்த தொற்றால் 3,157 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இது மீண்டும் 3 ஆயிரத்துக்கு கீழே வந்தது. அதன்படி நேற்று 2,568 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 205 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,88,118 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,23,920 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,802 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,44,689 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 19,509 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,89,48,01,203 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,79,208 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 3,27,327 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 83,89,55,577 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )