BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உடுமலை அருகே சாயப்பட்டறை பகுதியில் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் மீட்பு.

உடுமலை அருகே ஆண்டிகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட சாயப்பட்டறை பகுதி உள்ளது. தம்புரான் கோவில் செல்லும் வழியில் பூமிதானம் மூலம் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து செங்கல் சூளை நடத்தி வருவதாக கோட்டாட்சியர்க்கு புகார் வந்தது
இதைத்தொடர்ந்து உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர் அதில் அரசு நிலத்தை ஆக்கிரமித்த நபர் அதே நிலத்தில் உள்ள கனிம வளத்தை கடந்த 35 ஆண்டுகளாக எடுத்து செங்கல் சூளை நடத்தி வந்தது தெரியவந்தது.


இதுகுறித்து கோட்டாட்சியர் கீதா கூறும்போது உடுமலை அருகே பூலங்கினர் பகுதியை சேர்ந்த தனிநபர் அரசுக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்து எந்த அனுமதியும் இன்றி செங்கல் சூளை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து வருவாய் காவல் ஊரக வளர்ச்சி மின் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் சென்று உடனடியாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது கனிமவளத் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளவும் முறைகேடாக மண் எடுக்கப்பட்டது குறித்து கணக்கீடு செய்து அபராதம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )