மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தல் பிரச்சினை தொடர்பாக அகில பார இந்து மகாசபா நிர்வாகி அடித்து கொலை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரை சேர்நத கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் துரைப்பாண்டி(35). இவர் தனது மனைவி விஜயலெட்சுமி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் கோவில்பட்டியில் உள்ள ஊரணி தெருவில் வசித்து வந்துள்ளார். மேலும் அகில பாரத இந்து மகாசபா என்ற அமைப்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்துள்ளார். இவர் மீது சில வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கயத்தாரில் நடைபெறும் கோவில் விழாவிற்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளை பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார். தான் பின்னர் வருவதாக கூறி சென்றுள்ளார். இதையெடுத்து துரைப்பாண்டி அவரது நண்பர்கள் பழனி, மணிகண்டன், கார்த்திக், கருப்பசாமி என்ற சின்னத்துரை ஆகியோருடன் ஆட்டோவில் கயத்தார் அருகேயுள்ள தளவாய்புரத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்கி கொண்டு அங்குள்ள தனியார் ரியல் எஸ்டேட் இடத்திற்கு சென்று மது அருந்தியுள்ளனர். நேற்று நள்ளிரவு வரை மது அருந்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் திடீரென பைக்கில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து மது அருந்தி கொண்டு இருந்த 5 பேரையும் தாக்கியுள்ளது. இதில் மற்றவர்கள் தப்பித்து விட துரைப்பாண்டி மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. தப்பித்து ஓடியவர்கள் கயத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, போலீசார் விரைந்து வந்த பார்த்த போது துரைப்பாண்டி உடலின் சில பகுதிகளில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்துள்ளார்.

இதையெடுத்து போலீசார் துரைப்பாண்டியை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் துரைப்பாண்டி உயிரிழந்து விட்டார். இதையெடுத்து போலீசார் துரைப்பாண்டி உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது ரேஷன் அரிசி கடத்தல் பிரச்சினையில் கொலை சம்பவம் நடத்து இருப்பது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த மகாராஜன், ராஜாராம், மனோரஞ்சிக்குமார், சவலபேரியை சேர்ந்த ஜானகிராம், பூபாண்டி கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த சின்னத்துரை, திருமங்கலகுறிச்சியை சேர்ந்த முருகன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரேஷன் அரிசி கடத்தல் பிரச்சினை தொடர்பாக கடந்த சில தினங்களுக்க முன்பு கொலை செய்யப்பட்ட துரைப்பாண்டி மற்றும் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
