BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பள்ளி கல்வி துறை அமைச்சர் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லாத காரணத்தை காட்டி ஆங்கிலவழிக்கல்வி நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது?

ஆங்கில வழிக் கல்வி தொடர பெற்றோர்கள் கோரிக்கை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் முடித்து 11ஆம் வகுப்பு செல்லக்கூடிய மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்விக்கான வகுப்புகள் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி படித்து முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லக்கூடிய மாணவர்கள் தொடர்ந்து ஆங்கில வழியில் கல்வியை கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம், தொடர்ந்து பதினொன்றாம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அதற்கு தலைமை ஆசிரியரோ போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பதினொன்றாம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி நடைமுறைப்படுத்துவது சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியை படித்த மாணவிகள் அடுத்தபடியாக பதினொன்றாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் படிக்க வையுங்கள் என்று தலைமையாசிரியர் கூறியதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர்கள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாவட்ட நிர்வாகம் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தற்பொழுது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த பின், பதினொன்றாம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியை மாணவிகள் தொடர முடியவில்லை என்றால் மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி கல்வி துறை அமைச்சர் தொகுதியில் மாணவிகளுக்கு இந்த நிலைமையா? என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டது, இந்த நிலையில் காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2014ஆம் ஆண்டு முதல் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வரப்பட்டது.
பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலவழிக்கல்வி நடைமுறையில் இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் போது 11, 12ம் வகுப்பிற்கான ஆங்கில வழிக்கல்வி 2 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில வழி கல்வியில் படித்து முடித்து 11ஆம் வகுப்பு செல்லக்கூடிய மாணவிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அரசுப்பள்ளி மாணவிகளின் எதிர்காலத்தை கருதி மீண்டும் அதே பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )