தலைப்பு செய்திகள்
போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்துங்கள்! ராணுவம் அதிரடி உத்தரவு!! தொடரும் பதற்றநிலை!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் சூழலை மிஞ்சியுள்ள அங்கு தற்போது வெடித்துள்ள கலவரமும், போராட்டங்களும். போராட்டக்காரர்களையும், எதிர்ப்பாளர்களையும் அங்கு கட்டவிழ்க்கப்பட்டுள்ள ராணுவம் உள்ளிட்ட முப்படைகளும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

போராட்டத்தில் குதித்த பொது மக்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளை தீ வைத்ததன் தொடர்ச்சியாக அரசு மற்றும் தனியார் சொத்துக்களையும் தீக்கிரையாக்கி சேதப்படுத்தி வருகிறார்கள். இதனை கட்டுப்படுத்த இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வரலாறு காணாத உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இலங்கை முப்படைக்கும் போராட்டக்காரர்கள் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் பட்சத்தில் அவர்களை சுட்டுத்தள்ள அனுமதியளித்து உத்தரவு பிறப்பத்துள்ளது.

கடந்த 2 நாட்களாக அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ஆளுங்கட்சி எம்.பி. மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதுமட்டுமல்லாமல் நேற்று மாலை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 58 சிறைக் கைதிகள் சிறைக்கு திரும்பி கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த பஸ் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். எனவே போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் ஈடுபட்டிருந்ததை சாதகமாக்கிக் கொண்ட 58 கைதிகளும் தப்பியோடி தலைமறைவாகியதால் அங்கு குற்ற சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது

இலங்கையை மட்டுமல்லாது உலக நாடுகளையும் கலக்கத்திற்குள்ளாக்கியுள்ளது.போலீசாரால் இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் விளைவாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத்திற்கு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
