உலக செய்திகள்
பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற முன்னாள் முதல்வர்:

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. 84 வயதில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு அவர் இந்த தேர்ச்சியை பெற்றுள்ளார். ஹரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். அதில் பத்தாம் வகுப்பில் ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி அடையாத நிலையில் அவருடைய 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவினை மாநில தேர்வு வாரியம் நிறுத்தி வைத்திருந்தது. இதை அடுத்து பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்திற்கான தேர்வை எழுதினார் . இதன் பின்னர் அவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதை அடுத்து தலைநகர் சண்டிகரில் உள்ள தேர்வு மையத்திற்கு நேரில் சென்று தனது பொது தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு இந்தி நடிகர் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
