தலைப்பு செய்திகள்
பழைய ஓய்வூதியத் திட்டம்!

“ஓய்வூதியம் என்பது வரவு-செலவு சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. வாழ்நாள் முழுவதும் தனது உழைப்பை செலுத்திய ஊழியர்களுக்கு நிறுவனம் சட்டப்படி வழங்க வேண்டிய உரிமைத்தொகையே”
வெள்ளையர்கள் ஆண்டபோது 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. வெள்ளையர்கள் ஆட்சி நடத்த தேவைப்பட்ட இராணுவம், காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினர்.
சுதந்திரம் பெற்று 27 ஆண்டுகள் கழித்து 1971 முதல் தான் அனைத்து ஒன்றிய அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெற முடிந்தது.
தமிழகத்தில் 1978க்கு பின் தான் அரசு ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதியம் பெற்றனர். அதற்குபின் தான் மின்சாரம், போக்குவரத்து போன்ற தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற முடிந்தது.
நீண்ட போராட்டங்கள் மூலமே
ஓய்வூதியம் கிடைத்தது.
“ஓய்வூதியம் என்பது வரவு-செலவு சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. வாழ்நாள் முழுவதும் தனது உழைப்பை செலுத்திய ஊழியர்களுக்கு நிறுவனம் சட்டப்படி வழங்க வேண்டிய உரிமைத்தொகையே” என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
தன்னிடம் பணிபுரிந்த ஊழியர்கள், நிறுவனத்திற்கு உழைப்பைச் செலுத்திய ஊழியர்கள் வயதான பின்பு அமைதியாக, கவுரவமாக வாழ்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். உலகின் பல நாடுகள் மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதி யம் வழங்கி வருகின்றன.
இந்த அடிப்படையில்தான் தமிழகத்திலும்கூட OAP என்று சொல்கிற முதி யோர் பென்சனை அரசு வழங்கி வருகிறது.
புதிய ஓய்வூதிய திட்டம்
புதிய தாராளமயக் கொள்கை அமலான பின்பு, சமூக நலத்திட்டங்களுக்கு மூடு விழா நடத்த வேண்டும் என உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் ஆலோ சனை வழங்கின.
நவீன விஞ்ஞான மருத்துவ வசதி காரணமாக ‘ஓய்வு பெறுபவர்கள் ஓய்வுக்கு பின் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றனர்; ஓய்வூதியம் கொடுத்தால் அரசுகள் திவால் ஆகிவிடும்; எனவே ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பை அரசுகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என உலக வங்கி கூறியது.
உலக வங்கி கூறியவற்றை முன்மொழிந்துதான் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் புதிய ஓய்வூதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
1.1.2004க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூ திய திட்டத்தை வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 2003 ஆம் ஆண்டு அறிவித்தது.
2011ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது அரசு அதை சட்டமாக மாற்றியது.
2004க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் என ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா ஒருபடி மேலே சென்று 1.4.2003க்குப் பழைய ஓய்வூதியத் திட்டம்
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

2004க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் என ஒன்றிய அரசு அறிவித்தது. தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா ஒருபடி மேலே சென்று 1.4.2003க்குப் பின் பணியில்
சேரு வோருக்கு புதிய ஓய்வூதியம் என்று அறிவித்தார்.
ஆனால் இந்நடவடிக்கையை ஊழியர்கள் கடுமை யாக எதிர்த்து வந்தனர். இப்போது வரை அப் போராட்டம் தொடர்கிறது.
தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை 1.4.2003 முதல் அம லாக்குவதாக அதிமுக அரசு அறிவித்தாலும், இதுவரை தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
2003 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியம் என அறிவித்ததன் விளைவை 2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அரசு அனுபவித்தது; படுதோல்வி அடைந்தது. எனவே புதிய ஓய்வூதிய சட்டப்படி ஓய்வூ திய ஒழுங்குமுறை ஆணையத்துடன் (PFRDA) தமிழக அரசு ஊழியர்கள் இணைக்கப்படவில்லை.
2006இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்ததால் திமுக அரசும் எந்த முடிவும் எடுக்க வில்லை. 2011ல் அதிமுக புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது.
ஆனால் 10 ஆண்டுகள் கமிட்டி போட்டே காலத்தைக் கடத்தியது. இந்த சூழ்நிலையில்தான் திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு ஊழியர்களும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலை யில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குவது சாத்தியம் இல்லை என்ற நிதி அமைச்சரின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும், ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
சமூக நல அரசின் நிதி அமைச்சர்
கூறுவது நியாயமா?
சமூக நல அரசு எனக் கூறும் திமுக அரசின் நிதி அமைச்சர் ஓய்வூதியத்தை, மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை வரவு-செலவு பிரச்சனையாக சுருக்கிப் பார்ப்பதில் நியாயம் இல்லை, ஏற்றுக்கொள்ளும் அடிப்படையிலும் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை எனக் கூறியுள்ள நிதியமைச்சர் அர சின் வருமானம் பெரும்பகுதி ஊழியர்களின் சம்ப ளத்திற்கே செலவு செய்யப்படுகிறது என்றும் கூறி யுள்ளார்.
ஏற்கனவே இதே கருத்தை முன்பு ஜெய லலிதா கூறினார். அதற்கு பின் எடப்பாடி பழனிசாமியும் கூறினார். இப்போது நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பொதுமக்க ளுக்கு இது சரி என தோன்றும். ஆனால் உண்மை என்ன?
உதாரணமாக, பள்ளிக்கல்வி துறைக்கு சுமார் ரூபாய் 32 ஆயிரம் கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி ஆசிரியர் களின் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை குறைக்க வேண்டுமெனில் ஆசிரியர்களை நிறுத்திவிடலாமா?
ஆசிரியர்கள் இல்லாவிட்டால் அரசுக்கு சம்பளச் செலவு இல்லை. வெறும் பள்ளிக்கட்டிடமும், கரும்பல கையும், புத்தகங்களும் மாணவர்களுக்கு கல்வியை போதிக்குமா? காவலர்கள் இல்லாமல் காவல் நிலை யம் என்ன செய்யும்? மருத்துவர்களும், செவிலியர் களும் இல்லாமல் மருத்துவமனை எப்படி செயல் படும்?
இப்படி ஒவ்வொரு துறையின் செயல்பாடும் ஊழியர்களையும் உள்ளடக்கியதுதான். ஊழியர் களின் ஊதியத்தை மட்டும் தனித்துப் பார்ப்பது சரியான பார்வை இல்லை.
மீண்டும் மீண்டும் ஆளும் அரசு களின் தலைவர்கள் இவ்வாறு பேசுவது அரசின் மீதான பலவீனத்தை மறைக்க சொல்லும் ஒரு காரணமாகும்.
பழைய ஓய்வூதியம் – புதிய ஓய்வூதியம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தினால் அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று கூறிய நிதியமைச்சர் அதற்கான ஒரு கணக்கையும் கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் ரூ.2 லட்சம் செலவாகும்; புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் ரூபாய் 50,000 செலவாகும் என்ற கணக்கு எதனடிப்படை யில் கூறப்பட்டது என நிதி அமைச்சர் தெளிவுபடுத்த வில்லை.
இப்போது பணியில் உள்ள ஊழியருக்கு ஒரு வருடத்திற்கு அரசு செலுத்தும் பணத்தையும், 30 ஆண்டுகள் பணி செய்து ஓய்வூதியம் பெறும் பணத்தை யும் நிதி அமைச்சர் எப்படி ஒப்பிட முடியும்?
இப்போது செலுத்தப்படும் 50 ஆயிரம் ரூபாய் 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவாக மாறும்? ஓய்வூதி யத்திட்டம் வருவதற்கு முன்பு அரசு பங்காக செலுத்திய பொது வைப்பு நிதியை நிறுத்திவிட்டுத்தானே ஓய்வூதி யம் வழங்கப்பட்டது.
அரசு இனாமாக ஓய்வூதியம் தருவதுபோல் கூறுவது சரியா?
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து வோம் என ராஜஸ்தான் மாநில அரசு கூறியது; ஆனால் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) இது வரை கட்டிய பணத்தை தர மறுக்கிறது என நிதிய மைச்சர் கூறியுள்ளார்.
தான் செலுத்திய பணத்தை திருப்பிக் கேட்டால் தர முடியாது என PFRDA கூறு வதை சரி என நிதியமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா?
தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் கொள்கையை அறிவிக்க ஒரு மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என PFRDA கூறுவதை ஏற்றுக் கொள்ளலாமா?
மாநில சுயாட்சி, மாநில உரிமைகளை யெல்லாம் வலுவாக பேசும் தமிழக அரசின் நிதி யமைச்சர் அடிப்படைக் கொள்கைக்கு முரணான விஷயங்களை ஆதரிக்கலாமா?
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்க தடை இல்லை
தமிழக அரசு இதுவரை ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன் தனது ஊழியர்களை இணைக்க வில்லை. ஆனால் ராஜஸ்தான் மாநில அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே PFRDAவில் பணத்தை செலுத்திவிட்டது. இங்கே, ஓய்வூதியத்திற்கான அரசின் பங்கும், தொழிலாளர் பங்கும் இதுவரை தமிழக அரசு வசம்தான் உள்ளது.
எனவே, ராஜஸ்தான் அரசின் நிலையை தமிழ்நாட்டுடன் ஒப்பிடுவது சரியல்ல.
போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் படும் பணத்தை PFRDA க்கு அனுப்பக்கூடாது என சிஐடியு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு நிதிப் பிரச்சனையை வேண்டுமானால் காரணமாக சொல்ல லாமே தவிர, ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணை யத்தையோ, ஒன்றிய அரசையோ காரணமாக சொல்ல முடியாது.
1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்தோருக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் என அரசு அறிவித்துள்ளது.
ஆனால் உண்மை நிலை என்ன?
அரசிலோ, போக்கு வரத்திலோ, மின்சாரத்திலோ 1.4.2003க்கு பின் பணி யில் சேர்ந்தவருக்கு எந்த ஓய்வூதியமும் இதுவரை வழங்கப்படவில்லை. தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் ரூ. 1000 கிடைக்கிறது.
ஆனால் 1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்து ஓய்வுபெறும் அல்லது மரணம டைந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ஒரு பைசா கூட ஓய்வூதியம் இல்லை.
எதுவுமே கிடைக்காத ஓய்வூ தியத் திட்டத்திற்கு பெயர்தான் புதிய ஓய்வூதிய திட்டம்.
பல்லாண்டு காலம் பணிபுரிந்து அரசுக்கும், போக்கு வரத்து போன்ற அரசுத்துறை நிறுவனங்களுக்கும் தனது உழைப்பைச் செலுத்திய ஊழியர்களுக்கு ஓய்வூ தியம் மறுப்பது அநீதியானது. நிதியமைச்சரின் கூற்று முற்றிலும் தவறானது.
எல்லாவற்றிற்கும் முன்னுதார ணம் எனக் கூறும் தமிழக அரசு முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி முன்னுதாரணமாக செயல் பட வேண்டும்.
தீக்கதிர்0 பணியில்

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.