BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஊன்றுகோள் உதவியுடன் தன் உரிமைக்காக போராடும் கோவிந்தம்மாள் பாட்டி :

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியனூர் கிராமதில் வசித்து வரும் 78 வயதான கோவிந்தம்மாள் என்னும் வயதான பாட்டி தன் கணவனும், மகனும் இறந்து விட தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் கும்பகோணத்தில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வரும் கோவிந்தம்மாளின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரின் 1200 ச.அடி மனை மற்றும் வீட்டை ஆக்கிரமிப்பு செய்து கோவிந்தம்மாலையும் அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.

தன் தள்ளாத வயதில் ஊன்றுகோல் உதவியுடன் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு பல முறை அளித்துள்ளார்.

எந்த பயனும் இல்லை தாலுக்கா அலுவலகம் சென்றால் காவல் நிலையத்திற்கு விரட்ட படுவதாகவும், காவல் நிலையம் சென்றால் தாலுக்கா அலுவலகதிற்கு விரட்ட படுவதாகவும் கண்ணீர் மல்க கூறுகின்றார். தனக்கென்று சொல்லிக்கொள்ள ஒரு மகள் இருந்தும் எந்த பயனும் இல்லை உதவி செய்ய யாரும் முன் வரததால் தானே தன் கால் உடைந்த நிலையிலும் போராடி கொண்டு இருக்கின்றார்.

அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிகாரிகள் நீ போய் அனாதை ஆசிரமத்தில் தங்கிக்கொள் என்றும் சொல்கின்றனர் என வேதனையுடன் கூறுகிறார் கோவிந்தம்மாள்.
இந்த முறையாவது தனக்கு மாவட்ட ஆட்சியாரின் உதவியால் திரும்ப மனையும் வீடும் கிடைத்து விடும் என நம்புகிறார் கோவிந்தம்மாள் பாட்டி.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )