BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பரபரப்பான சூழ்நிலையில் இன்று தர்மபுரி ஆதினம் பட்டணப் பிரவேசம்!!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கான பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறும். இதில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச்சென்று வீதியுலா செல்வது வழக்கம். வரும் 22-ந் தேதி பட்டின பிரவேசம் விழா நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி, பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து கடந்த மாதம் 27-ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

 

இதற்கு தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்புகள், ஆதீனங்கள் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்திருந்தன. பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்தனர்.

 

இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமுகமான முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதனிடையே பட்டணப் பிரவேசத்திற்கு விதித்த தடையை நீக்க முதல்வரை நேரில் சந்தித்து ஆதீனங்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

 

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச பெருவிழாவை இன்று கொடியேற்றி தொடங்கப்பட்டது. முக்கிய விழாவான 11-ம் திருநாளான மே 22-ம் தேதி இரவு நடைபெறும் பட்டணப்பிரவேச நிகழ்வில், தருமபுரம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகைப் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )