கல்வி
நீட் தேர்வுகள் 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்தி வைப்பு?! இந்திய மருத்துவ சங்கம்!!

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை பயில நீட் தேர்வுகள் அவசியம். அந்த வகையில் இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17ம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21ம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்நிலையில் முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தோ்வு தாமதமாகவே நடைபெற்றது. கடந்த ஆண்டுக்கான முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வே இன்னும் நடத்தி முடிக்கப்படாத நிலையில் நடப்பாண்டுக்கான தோ்வை நடத்துவது முறையாக இருக்காது. இதன் அடிப்படையில் முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. முதுநிலை நீட் தேர்வை 8 முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை இந்திய மருத்துவ சங்கம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதே நேரத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி எம்பிபிஎஸ் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை மே 13ம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
