மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் – தேசிய பலுதூக்கும் போட்டியில் திண்டுக்கல் மாணவர் சாதனை.

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான பலுதூக்கும் போட்டியில் திண்டுக்கல் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவன் கிறிஸ்துராஜா இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார் . அவருக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் திண்டுக்கல் வர்த்தக சங்க தலைவர் சுந்தர் ராஜன் மாணவனுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், செயலாளர் கலையரசன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் சக ஆசிரியர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
