மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- எம்ஆர்பி செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்.

உலகம் முழுவதும் மே 12ஆம் தேதி நேற்று செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் எம்ஆர்பி செவிலியர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் இருந்து திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க கட்டடத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி பேருந்து நிலைய சாலை, ஸ்கீம் ரோடு வழியாக சென்று அரசு அலுவலக அலுவலர் சங்க கட்டிடத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து செவிலியர்களும் தங்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், காலமுறை ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோஷமிட்டு வலியுறுத்தினர். இந்த ஊர்வலத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
