மாவட்ட செய்திகள்
பாரதிய ஜனதா கட்சியில் ” தல போல தான் வாலும் இருக்கும் ” மாநில தலைவர் போலவே மாவட்ட தலைவர்களும் வேலை செய்கிறார்கள் என திருச்செந்தூரில் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பேசியது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜகவில் புதியதாக மாநில மற்றும் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்ராங்கன தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் அறிமுகக் கூட்டம் திருச்செந்தூரில் தனியார் மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது புஷ்பா என்றால் பிளவர் இல்லை பயர் என புஷ்பா திரைப்பட வசனத்தை பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் வருகின்ற வழியில் அதிகமாக மாற்று கட்சியினரின் விளம்பர பதாகைகள் , சுவர் விளம்பரங்கள் அதிகளவில் இருந்ததை பார்த்த போது மனம் வேதனையடைகிறது என்றார்.

மேலும் பாஜகவினர் அனைத்து கிராமங்களிலும் பாஜக கட்சி விளம்பர பதாகைகள் , கட்சிக் கொடியை ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பாஜகவில் மாநிலத் தலைவர் போல தான் அனைத்து மாவட்ட தலைவர்களும் தல போல தான் வாலும் இருக்கும் என அவர் பேசினார்.. இந்த கூட்டத்தில் பாஜக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் நெல்லை அம்மாள் உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
