BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மோதியதில் அப்பளமாக நொருங்கிய கார்!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் கபிலன். இவருக்கு வயது 22. இவர் தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை சந்திரசேகர். கல்லூரி மாணவன் கபிலன் வழக்கம் போல இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து கல்லூரிக்கு கார் மூலம் வழக்கம் போல புறப்பட்டார். அவர் தனது காரில் செங்கல்பட்டு வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.

கார் திருக்கழுக்குன்றம் கீரப்பாக்கம் என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ், மாணவன் கபிலன் கார் மீது பலமாக மோதியது. எதிரெதிரே காரும்& அரசு பஸ்சும் மோதிக் கொண்ட வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

 

இந்த கோர விபத்தில் காரில் உடல் நசுங்கி, ரத்த வெள்ளத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த திருக்குழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் கடினமாக முயன்று கபிலன் உடலை காரில் இருந்து மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த திருக்குழுக்குன்றம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

கல்லூரிக்கு சென்றுவிட்டு வருகிறேன் என்று கூறிச் சென்ற மாணவன், சாலை விபத்தில் பலியான சம்பவம் குடும்பத்தினர் மத்தியிலும், உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )