BREAKING NEWS

கஞ்சா, குடிபழக்கத்துக்கு அடிமையான ஹேம்நாத் தங்கள் மகளை கொலை செய்துவிட்டார்- சித்ராவின் பெற்றோர்

கஞ்சா, குடிபழக்கத்துக்கு அடிமையான ஹேம்நாத் தங்கள் மகளை கொலை செய்து செய்துவிட்டார்- சித்ராவின் பெற்றோர்.

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கை நியாயமான முறையில் மறு விசாரணை செய்ய வேண்டும் என நடிகை சித்ராவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளார். சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம்தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் ஜாமீனில் விடுதலை ஆகிய சித்ரா கணவர் ஹேமநாத் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சித்ரா உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அதற்காக, சித்ராவின் பெற்றோர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஹேம்நாத் தப்பிக்க இந்த வழக்கை திசை திருப்ப தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், ஏற்கனவே காவல்துறையினர் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனவும், சித்ராவின் உடலை எரிக்கக் கூறி வலியுறுத்தியதாகவும் காவல்துறையினர் அப்போது தங்களை மிரட்டியதாகவும், தற்போது காவல்துறையினர் நியாயமான முறையில் மறுவிசாரணை நடத்த வேண்டும் எனவும் சித்ராவின் பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

ஹேம்நாத் கஞ்சா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், தற்போது தன் மகளைப் பற்றி தவறான தகவல்களை ஹேம்நாத் பரப்பி வருவதாகவும் சித்ராவின் தாயார் விஜயா கூறியுள்ளார். சித்ரா கழுத்தில் கடித்த தடயங்கள் இருப்பதாகவும், ஹேம்நாத் தான் கொலை செய்துவிட்டு தற்கொலசெய்து கொண்டது போல நாடகமாடி இருப்பதாகவும் சித்ராவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். சித்ராவின் பெற்றோருக்கு மர்ம நபர்கள் மிரட்டல் கொடுப்பதாகவும், இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும் சித்ரா பெயரில் உள்ள வீட்டை அபகரிக்கவும் ஹேம்நாத் முயற்சித்து வருவதாக சித்ராவின் பெற்றோர் கூறியுள்ளனர். சித்ரா தற்கொலை செய்துகொண்ட இடத்தில் கஞ்சாவை கைப்பற்றி இருப்பதாக போலீசாருக்கு கூறியுள்ள நிலையில், கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்திற்கு ஹேம்மநாத் அடிமையாகி தன்னுடைய மகளை கொலை செய்து விட்டதாகவும், சித்ரா உயிருடன் இருக்கும் பொழுது வெள்ளைத் தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டதாகவும் சித்ராவின் பெற்றோர் கூறுகின்றனர்.

கடந்த ஆட்சியில் உரிய முறையில் காவல்துறை விசாரணை நடத்தவில்லை எனவும் தற்போது இதுகுறித்து முதலமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் சித்ராவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )