BREAKING NEWS

காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டி

காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டி.

காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டியை உயிருடன் மீட்ட காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ,காட்பாடி அடுத்த எம்ஜிஆர் நகர் 5 வது தெரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாயொன்று குட்டிகளை ஈன்றெடுத்து உள்ளது. அதில் ஒரு குட்டியானது அப்பகுதியில் உள்ள ஜெய்சங்கர் என்பவரின் வீட்டிற்கு அருகிலுள்ள இடிபாடுகளுக்குள் தலைகீழாக சிக்கி மூன்று நாட்கள் தவித்து வந்தது. இந்த சூழ்நிலையில் ஜெய்சங்கர் உடனடியாக காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். இந்த தகவலின் பேரில் காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் பால்பாண்டி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கிய நாய்க்குட்டியை உயிருடன் மீட்டு அதற்கு உடனடியாக பால் ஊட்டிய மனிதாபிமான சம்பவம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் கருணையின் நிறம் காக்கி என்பதை நித்த். இதுபோன்ற பல செயல்பாடுகள் முருகேசன் ஆர்வமுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனால் அவரது பணி, ஈடுபாடு ஆகியவற்றை சேர்த்து நன்கு பார்த்து வரும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். முருகேசன் ஆர்வமுடன் தொடர்ந்து பணியாற்றிட நன்றி தெரிவித்துள்ளனர் காட்பாடி பகுதி வாழ் பொதுமக்கள்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )