BREAKING NEWS

மின்னல் வேகத்தில் வந்த டூவீலர்… பறிபோன காட்டெருமை உயிர்: வாலிபர் மருத்துவமனையில் அட்மிட்!

மின்னல் வேகத்தில் வந்த டூவீலர். பறிபோன காட்டெருமை உயிர்: வாலிபர் மருத்துவமனையில் அட்மிட்!

மின்னல் வேகத்தில் வந்த டூவீலர்... பறிபோன காட்டெருமை உயிர்: வாலிபர் மருத்துவமனையில் அட்மிட்!

மின்னல் வேகத்தில் வந்த வாலிபரின் டூவீலர் மோதி காட்டெருமை கன்று பலியானது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட செந்துறை-அடைக்கனூர் பகுதியில் காட்டெருமைகள் அதிகம் வசிக்கின்றன. இவை அடிக்கடி இப்பகுதியில் உள்ள வயல்களில் புகுந்த பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் மாமரத்துப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (25) டூவீலரில் மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு இன்று அதிகாலை டூவீலரில் அதிவேகமாகச் சென்றார்.

அப்போது கோடாங்கிகுட்டு பகுதியில் காட்டெருமை கன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது சிவக்குமார் ஓட்டி வந்த டூவீலர் மோதி காட்டெருமை கன்று சம்பவ இடத்திலேயே பலியானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டெருமை கன்று உடலை மீட்டு காட்டுப்பகுதியில் தகனம் செய்தனர்.

 

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )