AK62-ல் இதெல்லாம் இருக்கவே கூடாதாம்..? அஜித் போட்ட புதிய கன்டிஷன்…விக்னேஷ் சிவன் ஆலோசனை..?

62′: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும், அஜித் 62 படத்தின் படப்பிடிப்பு வரும் வரும் அக்டோபரில் துவங்க உள்ளது.

வலிமை வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில், ‘அஜித் 61’ படத்தில் நடித்து வருகிறார். ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘அஜித் 61’ ‘ திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
போனி கபூர் தயாரிப்பில், வெளியாகும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் படப்புகழ் மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் கோக்கன், நடிகர் வீராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். வீரா’ என தலைப்பு வைத்துள்ள இந்த திரைப்படத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் 61 படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனது கடின உழைப்பால் வாழ்க்கையில் உயர்ந்த ஒருவரின் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இளைஞரான கெட்டப்பிலும் பின் உழைத்து முன்னுக்கு வந்த இளைஞனாகவும் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அஜித் 62 படத்தின் படப்பிடிப்பு வரும் வரும் அக்டோபரில் துவங்க உள்ளது. இந்த படத்தில் ஆர்கானிக் விவசாயியாக இருக்கும், அஜித்திற்கு கார்ப்பரேட் முதலாளிகள் இடைஞ்சல் தருவது போன்று காட்சி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படத்தில் கார்ப்பரேட் முதலாளிகள் குறித்து சில ஆவேசமாக வசனங்கள் இருப்பதால் அதனை மாற்றுமாறு விக்னேஷ் சிவனுக்கு, அஜித் அதிரடி கண்டிஷன் போட்டுட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இது குறித்து விக்னேஷ் சிவன் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அஜித் நான் அரசியல் வாதியாக நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
