BREAKING NEWS

ரேஷன் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்தால் NO WORK NO PAY…

ரேஷன் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்தால் NO WORK NO PAY…

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை என்ற “NO WORK NO PAY” அடிப்படையில் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

*அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

*நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும்.

*புதிய 4 ஜி விற்பனை முனையம் வழங்க வேண்டும்.

*விடுமுறை நாள்களில் நகா்வுப் பணியை நிறுத்த வேண்டும்.

*பொட்டல முறையை அமல்படுத்த வேண்டும்”

என்ற ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் ரேஷன் கடைகளை முழுஅடைப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களும் கோரிக்கையை மீட்டெடுக்க வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு சென்னையில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பது என பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை என்ற “NO WORK NO PAY” அடிப்படையில் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஸ்டிரைக்கில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து கடைகளை திறக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )