திருச்சியில் நூறாண்டு பழமையான தனியார் மருத்துவமனையில் புதிய சிகிச்சை பிரிவுகள் துவக்கம்.

திருச்சி புத்தூரில் நூறு ஆண்டு பழமையான மதுரம் மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று
அவசர சிகிச்சை பிரிவு (icu), டயாலிசிஸ் பிரிவு, பல் சிகிச்சை பிரிவு ஆகிய புதிய சிகிச்சை பிரிவுகளின் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஹைதராபாத் இந்திய மிஷின் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரெவரெண்ட் ஐசக்.சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு இப்பிரிவுகளை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மண்டல மேலாளர் சுசில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஊழியருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
TAGS தமிழ்நாடு
