உடுமலை சின்னாறு வழிதடத்தில் நடுரோட்டில் குட்டியை ஈன்ற காட்டு யானை.

கேரள மாநிலத்திற்கு உடுமலையிலிருந்து செல்லும் மலைவழி பாதையில் நிறை மாத கர்ப்பிணியான காட்டு யானை ஒன்று நடுரோட்டில் குட்டியை என்றது இதைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கேரள மாநிலம் மறையூர் பகுதியில் உள்ளது சின்னார் வனவிலங்கு சரணாலயம் இங்கு காட்டு யானை புலி காட்டு மாடு காட்டு மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சின்னார் வனவிலங்கு சரணாலயம் ஆனது உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் பாதையில் உள்ளது. மழைச்சாலையான இந்த வழியில் தினமும் மூன்று கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை ஐந்து மணியளவில் ஆலம்பட்டி சம்பக்காட்டுக்கும் இடையே ஒரு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது. சாலையை மறித்தபடி காட்டுயானை நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வன பகுதிகள் செல்லும் வரை காத்திருப்பது என முடிவு செய்தனர்.
இந்நிலையில் அந்த கர்ப்பிணி யானை குட்டியை என்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் வாகனங்களை அந்த வழியாக இயக்கத் தடை விதித்தனர் காலையில் யானை தனது குட்டி அழைத்துக்கொண்டு வனப்பகுதியில் சென்றது
அதுவரை சாலையின் இரு புறமும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனத்திற்குள் அமர்ந்தபடி யானை நடவடிக்கைகளை கண்டும் செல்போனில் படம் பிடித்தபடி இருந்தனர்.
கர்ப்பிணி யானை குட்டியை பிரசவித்து அது வனப்பகுதிக்கு பத்திரமாக கொண்டு செல்லும் வரை சின்னார் வனவிலங்கு சரணாலயத்தின் கரிமுட்டியில் உள்ள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
