செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் ரூ.3 கோடிக்கு விவசாயிகளிடமிருந்து பருத்தி மறைமுக ஏலத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.


மயிலாடுதுறை 08.08.2022
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4986 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பான்மையான விவசாயிகள் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பருத்தி வரத்து அதிகரித்துள்ளது. செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேசிய வேளாண் மிண்ணனு திட்டத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில், 3,000 குவிண்டால் பருத்தி அதிகபட்ச விலை குவிண்டால் ரூ.12,099-க்கும், குறைந்தபட்ச விலை ரூ.10,900-க்கும், சராசரியாக ரூ.11,450-க்கும் விலைபோனது. இதில் 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டுவந்த பருத்தியை, ஆந்திரா மாநிலம் மற்றும் தஞ்சை, நாகப்பட்டினம், தேனி, சேலம், விழுப்புரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்தும் மில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளும் கலந்து கொணடு கொள்முதல் செய்தனர். பருத்தி அதிகபட்சம் ரூ.12,099க்கு விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
