BREAKING NEWS

தலித்கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் இணைத்திட தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டம்.

தலித்கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் இணைத்திட தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டம்.

தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி,எஸ்.டி., பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை ஆகஸ்ட் 10 கருப்பு தின கோரிக்கை விளக்க அரங்க கூட்டத்தை மாநில பொதுச் செயலாளர் டாக்டர் எம். ஜான்சன் துரை தலைமையில் நடத்தினர் மாநிலத் துணைத் தலைவர் வடுக குடி வின்சென்ட் வரவேற்புரை ஆற்றினார்.

பெருவை ஆரோக்கியராஜா மோட்ச ராஜ் திருச்சி காட்டூர் சுரேஷ் சந்தர் வேளாங்கண்ணி,மங்கலம் டோமினிக் விக்டர் ரவிசங்கர் ஆனந்தராஜ் வரகூர் எட்வின் கள்ளப்பெரம்பூர் வின்சென்ட் நகர் சகாயம் மேலப்பூண்டி அந்தோணி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் எஸ்.சி,எஸ்.டி பணிக்குழு தமிழக செயலாளர் குழந்தை நாதன் வழக்கறிஞர் தாஸ் பிரகாஷ் தமிழ் சேனவராயன் ஜான் பீட்டர் ஜான் பிரிட்டோ வல்லரசு ராஜமாணிக்கம் ஆகியோர்சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.

தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆற்றிய பங்கினை குறித்து தேசிய பொதுச்செயலாளர் இ.டி.சார்லஸ் உரையாற்றினார்.உச்ச நீதிமன்றத்தில் அட்டவணை பட்டியலில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்கான வழக்கின் தன்மை பற்றி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிராங்கிளின் சீசர் தாமஸ் உரையாற்றினார்.

தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ்,தேசிய துணைச் செயலாளர் வழக்கறிஞர் சந்தானத்துரை, தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி நிறுவனர் குழந்தை அரசன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாட்டு சபையில் வாதிடப்பட்டு இந்திய நடுவன அரசிற்கு பரிந்துரை செய்துள்ளதை அமல்படுத்த வேண்டுமென ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநிலத் துணைச் செயலாளர் அருண் மாசிலாமணி நிகழ்ச்சி நெறியாளராக தொகுத்து வழங்கினார் தஞ்சை மாவட்ட செயலாளர் ராஜா என்கின்ற மரிய ஜீசஸ் நன்றி உரையாற்றினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )