BREAKING NEWS

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம்.

குடியாத்தம்,

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000 சதுர அடி பரப்பில் பாரதமாதா படம் வரையும் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது. 75 மாணவிகள் கலந்து கொண்ட இந்த பாரதமாதா உருவப்படம் 40 அடி அகலத்திலும் 50 அடி நீளத்திலும் சுமார் எட்டு மணி நேரம் பணியாற்றி வரைந்தனர்.

 

சிறப்பாக பாரதமாதா உருவப்படத்தை வரைந்த மாணவிகளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீலி கிறிஸ்டி, நகர மன்ற உறுப்பினர் ஜாவித் அகமது, அபிராமி கல்லூரி தலைவர் எம்.என்.ஜோதிகுமார் உள்ளிட்டோர் பாராட்டினார்கள். மாணவிகள் வரைந்த பாரதமாதா உருவப்படத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து பாராட்டி வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )