தஞ்சையில் பேரிடர் அபாய குறைப்பு முகமை சார்பில் பேரிடர் மீட்பர்களுக்கான 12 நாள் பயிற்சியை துவக்கி வைத்தார் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர்….

மழை வெள்ள காலங்கள், நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட எதிர்பாராவிதத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளில் இருந்து , பொதுமக்களை மீட்பது, கிடைக்கும் பொருட்களை கொண்டு மீட்பு உபகரணங்களாக உபயோகித்து பயன்படுத்துவது, உள்ளிட்ட பயிற்சிகளை பேரிடர் மீட்பர்களுக்கு 12 நாட்களுக்கு அளிக்கும் பயிற்சி முகாமை தஞ்சை ரெட்கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் இன்று துவக்கி வைத்தார் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்….

இப்பயிற்சி முகாமில் இடர்பாடு காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை உயிர்காக்கும் மருத்துவ சேவைகளை வழங்குதல், அதிக இரத்தபோக்குகளை தடுப்பது, கயிறு மூலம் மீட்பது,பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது…
இம்முகாம் துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் மனோபிரசன்னா, கோட்டாட்சியர் இரஞ்சித், ரெட்கிராஸ் சேர்மன் இராசமாணிக்கம், ரெட்கிராஸ் பொருளாளர் முத்துகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்..
