BREAKING NEWS

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும் வாலிபர் சங்க மாநாட்டில் கோரிக்கை

தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும்  வாலிபர் சங்க மாநாட்டில் கோரிக்கை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தஞ்சை மாவட்ட 18 வது மாநாடு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

மாநாட்டிற்கு தாராசுரம் பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வலம் வந்து பகத்சிங் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர் வாலிபர் சங்க கொடியை மாவட்ட குழு உறுப்பினர் மோரிஸ் அண்ணாதுரை ஏற்றினார் மாவட்ட தலைவர் ஆம்பல் துரை. ஏசுராஜா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்

வரவேற்பு குழு கௌரவத் தலைவர் மாமன்ற உறுப்பினர் ஏ செல்வம் வரவேற்புரை ஆற்றினார் மாநில துணை செயலாளர் சி பாலசந்தர போஸ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார் மாணவர்கள் சங்க மாவட்ட செயலாளர் கே எஸ் சந்துரு வாழ்த்துரை வழங்கினார் மாவட்ட செயலாளர் அருளரசன் வேலை அறிக்கையும் மாவட்ட பொருளாளர் ராமன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்

நிறைவாக மாநில துணைத்தலைவர் கே.பி ஜோதிபாசு நிறைவு உரை ஆற்றினார் வரவேற்பு குழு செயலாளர் ரஞ்சித் குமார் நன்றி தெரிவித்தார்

மாநாட்டில் புதிய மாவட்ட நிர்வாகிகளாக
மாவட்ட தலைவராக அருளரசன் மாவட்ட செயலாளராக ஆம்பல் துரை. ஏசுராஜா துணைத் தலைவர்களாக ரஞ்சித் குமார், துணை செயலாளராக தமிழரசி, பெர்ணா ட்சா செயற்குழு உறுப்பினர்களாக தமிழினியன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 27 மாவட்ட குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்

மாநாட்டில்
தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும்

மாவட்ட தலைமை மருத்துவமனையான கும்பகோணம் தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி போதிய மருத்துவர்களை பணியமறுத்திட வேண்டும்

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்

கும்பகோணம் சுற்றி உள்ள கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து கும்பகோணத்தை மையமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )