BREAKING NEWS

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற ரேடியாலஜிஸ்ட் அசிஸ்டன்ட் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தஞ்சையில் நடைபெற்ற ரேடியாலஜிஸ்ட் அசிஸ்டன்ட் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தஞ்சையில் இந்த ரேடியாலஜிஸ்ட் அசிஸ்டன்ட் அசோசியேசன் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் காலிப் பணியிடங்கள் நிரப்பிட வேண்டும், பொது சுகாதாரத் துறையில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும், மருத்துவத்துறையில் நுண்கதிர் பிரிவு உட்பட அனைத்து துறைகளுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவு படுத்த வேண்டும்,

மருத்துவத்துறையில் தனியார் மையத்தை கைவிட வேண்டும், பொது சுகாதாரத் துறையில் உள்ள பணியிடங்களை ஒப்படைப்பு செய்யாமல் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களை தொடர வேண்டும் எனவும் மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )