பேரணாம்பட்டு சார்பதிவாளர் அலுவலர் ராதிகாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூர், பேரணாம்பட்டு பங்களா மேட்டில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது சார் பதிவாளராக ராதிகா பணியாற்றி வருகிறார் இவர் பதவி ஏற்று கொண்ட நாளிலிருந்து இன்றைய தேதி வரை பத்திரப்பதிவுக்காக பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது கண்டித்தும்,
பத்திரங்களை பதிவு செய்வதற்காக 50 ஆண்டுகால மூலப்பத்திரத்தை கொண்டு வாருங்கள் என்று பொதுமக்களை ராதிகா நர்சரிபதையும் கண்டித்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சுதந்திர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட செயலாளர் நசே. தலித் பாஸ்கர் தலைமை தாங்கினார் முன்னாள் ஒன்றிய செயலாளர் வே. குமார். ஐ ஜே கே கட்சியின் மாவட்ட தலைவர் பாபாஜி ராஜன். ஆகியவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
