தேனி அருகே கனரக வாகனங்கள் செல்ல கூடாது என்று சாலையின் நடுவே கற்களை போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி.

தேனி மாவட்டம், ஓ.பி.எஸ் சின் சொந்த தொகுதியான போடியில் திடீரென்று கனரக வாகனங்கள் செல்ல கூடாது என்று சாலையின் நடுவே கற்களை போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி.
போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதியான இரட்டைவாய்க்கால் பகுதியில் ரயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருவதால்,
கேரளாவிற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் போடி 6வது வார்டு உழவர் சந்தை 100 அடி சாலை வழியாக கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் வரும் கனரக வாகனங்கள் செல்லும் பகுதியில் வீடுகளுக்கு செல்லும் மின் வயர்கள் தாழ்வான உயரத்தில்உள்ளதால் கனரக வாகனங்கள் மின்வயர்களை அறுத்துவிட்டு செல்வதால் அறுந்து விழும் மின் வயர் மூலம் மின்சாரம் பாய்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் அடிக்கடி மின் வெட்டும் ஏற்படும் சூழல் உள்ளது
இதனால் அதிமுகவைச் சார்ந்த இப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வி தனது வார்டு மக்களின் பிரச்சனையை நகராட்சி மற்றும் மின்சார வாரியத்தில் கோரிக்கையாக வைத்துள்ளார்.

ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் மின்சார வயர்களை மாற்றி அமைக்கும் செலவுகளை அப்பகுதி மக்களை அவரவர் சொந்த செலவில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் கூறியதைத் தொடர்ந்து
ஆத்திரம் அடைந்த 6வது வார்டு அதிமுக கவுன்சிலர் கலைச்செல்வி வாகனங்கள் செல்லும் பாதையில் பெரிய கற்களை வைத்து சாலையைமறித்து கனரக வாகனங்கள் இப்பகுதியில் செல்லக்கூடாது என தடுத்தி நிறுத்தி மக்களுடன் சேர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி நகர் காவல் துறை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் பிரேம் ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி இடமும் பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவரிடம் வார்டு கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி தருமாறும் அதற்குரிய செலவை நகராட்சியும் மின்வாரியமும் மற்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் பொது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எடுத்துரைத்தனர்.
ஓரிரு நாட்களில் இதற்கு உரிய தீர்வு காண்பதாக மின்வாரிய அதிகாரியும் நகர மன்ற தலைவரும் உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக முற்றுகை போராட்டத்தை கைவிட்டார்.
ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் கூறினார்.
போடி நகராட்சி நிர்வாகம் அதிமுக வார்டு கவுன்சிலர்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நலத்திட்டங்களை புறக்கணித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
