பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா.

தஞ்சையில் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா நடைபெற்றது.
தஞ்சை குழந்தை இயேசு கோவில் எதிர்புறம் உள்ள பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அன்னை வேளாங்கண்ணி கல்லூரி செயலர் செயலர் மற்றும் தாளாளர் ஜெபஸ்டின் பெரியண்ணா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் வின்சென்ட் வரவேற்றார்.
விழாவில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, பள்ளி முதல்வர் சகோதரி பிரமிளா சார்ந்தா மேரி, பள்ளி நிர்வாக அதிகாரி கஷ்மீர், அலுவலர் பவுல், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் யாரா இருந்தாலும் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது, சான்றிதழ், கோப்பைகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
எல்.கே.ஜி. முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
