BREAKING NEWS

அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் நடைபெற்றது.

அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு முதல் மாநில மாநாடு  மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது புதிய சங்க அலுவலகத்தை தென் மண்டல வள்ளுவர் குல சங்கத்தின் தலைவர் கலாநிதி ஆனந்தன் திறந்து வைத்தார்.

 

உடன் எம்.கே.சாமி. ஜி.கே.வள்ளுவர்நாயனார் கூட்டுத் தலைமை ஏற்க.பொதுச் செயலாளர் இராமமுருகன்.துணைப் பொதுச் செயலாளர் பி.சிலம்பரசன் மகளிர் அணி மாநில தலைவர் திருமதி உமாமகேஸ்வரி,

ஆலோசகர்கள் இராஜ பரசுராம ஆழ்வார், மற்றும் ச.சதாசிவம் ஒருங்கிணைப்பாளர்,

.மணிநவநீதம் உதவி தலைவர் ஜே.வரதராஜன ஆகியோர் உரையாற்றினார்கள் தமிழகத்தின் வள்ளுவர் குல அமைப்புகளின் பல தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

எம்.என்.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.தமிழக அரசுக்கு ஜந்து கோரிக்கைகள் முன்வைத்தனர்.

 

1.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் மகத்தான சட்டப்படி ஆலயங்களில் வழங்கப்படும் வேலைகளில் வள்ளுவர்கள் இன மக்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

 

2.பாரம்பரிய வள்ளுவர் குல சோதிடர்கள் நல வாரியம் என்ற பெயரில் வாரியம் அமைத்து இந்த ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும்.

 

3.மக்கள் தொகை கணக்கெடுப்பிறகு எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கை இயங்கிக் கொண்டு இருக்கும் தமிழக அரசு அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.

 

4. தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் சிலைகளுக்கே களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள் இதை தடுப்பதற்கு நிலையான உத்தரவை தமிழக அரசு போட வேண்டும்.

 

5.எங்கள் இனத்தை தொழில் சார்ந்து வெவ்வேறு பெயரில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 

இவற்றை ஒன்றிணைத்து திருவள்ளுவர் என்ற ஒரே பெயரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) பட்டியலில் சேர்க்க சட்ட ரீதியாக ஆவன செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )