BREAKING NEWS

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர் கைது.

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர் கைது.

எடப்பாடியில் உழவர் சந்தை அருகே மதுவில் ஊமத்தங்காய் சாறை கலந்து விற்பனை செய்த நபர்…!!! உருட்டியேடுத்த போலீசார்..!!!

 

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த டென்னிஸ் கிளப் பகுதியை சேர்ந்தவர் மெய்வேல் மகன் சேட்டு 47 இவர் கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் இருந்து மது பாட்டில்களை வாங்கி அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்து வந்தது மட்டுமின்றி அதிக போதை ஏறுவதற்காக ஊமத்தங்காய் சாறை மதுவில் கலந்து விற்றுவந்துள்ளார்.

 

 

இதனை தொடந்து, எடப்பாடி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், எடப்பாடி போலீசார் அப்பகுதி முழுவதும் கடந்த மூன்று நாட்க்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

இதையடுத்து, இன்று சந்தேகத்திற்கிடமாக எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்த சேட்டு என்பவரை பிடித்து நீண்ட நேர விசாரனைக்கு பின்னர், அவர் அரசு மதுபானத்தை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதும் அதிக போதை ஏறுவதற்காக ஊமத்தங்காய் சாறை மதுவில் கலப்பதையும் ஒப்புக்கொண்டார்.

 

 

அதேபோல் போடிநாயக்கன்பட்டியை, சேர்ந்த முனியன் மகன் வடிவேலு என்பவரும் அரசு மதுவை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்றுவந்த நிலையில், இருவரிடமும் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )