வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திறப்பு விழா கண்ட புதிய பேருந்து நிலையம். திறந்தும் பயனில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம்,
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் 9.5 ஏக்கரில் 3.187 சதுர மீட்டர் பரப்பளவில்.
84 பேருந்துகள் நிறுத்துவதற்கும்,
82 கடைகள்.
3.உணவகங்கள்.
பயணிகள் தங்கும் இடம்.
95. டூவீலர் நிறுத்துமிடம்.
16. கார்கள் நிறுத்துவதற்கு, போன்ற உள்ளடங்கிய பணிகளுக்காக. ரூபாய் 53 கோடியே 13லட்சம். ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம்29 தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பணிகள்முழுமையாக முடியாத காரணத்தினால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை உணர்ந்த மாநகராட்சி நிர்வாகம் முதற்கட்டமாக கடந்த ஜூலை16 சென்னை பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.
கடந்த 7 ஆம் தேதி முதல் ஆரணி. திருவண்ணாமலை. மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இன்றி மற்ற மாவட்டங்களுக்கும்.

மற்ற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் தற்போதைய இயக்கப்படுகின்றன இதனால் பல ஆயிரம் பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனால் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் தேவையான. குடிநீர். கழிப்பறை. உட்காருவதற்கான இருக்கைகள் போன்றவை பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன என்று பொது மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் பொது கழிப்பிடம் என்றும் ஏதும் கிடையாது. இருக்கின்ற கழிப்பிடத்திற்கு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 5 முதல் 10 வரை வசூல் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குடிநீர் சரியாக வருவதில்லை என்றும் உணவகம் கிடையாது என்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்கள் நடவடிக்கை எடுத்து மக்களின் அன்றாட தேவையான குடிநீர் பொதுக் கழிப்பிடம். உணவகங்கள் ஆகியவற்றை பொது மக்களுக்கு சரியான முறையில் வழங்க நடவடிக்கை வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
